அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று (11) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த யான ஆர்.டி.சஞ்சீவ (வயது 41) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகை அலங்கார உரிமையாளரான குறித்த நபர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
அவ்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் வீட்டுக்குள் புகுந்து அவரைச் சுட்டுப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.