யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் தம்பாபிள்ளை அவர்கள் 04- 08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை, அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயானி அவர்களின் அன்புக் கணவரும்,
லோஜிகா, தர்மிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாக்கியம்(கனடா), தவமணி(கனடா), காலஞ்சென்ற பத்மநாதன்(அவுஸ்திரேலியா), அற்புதமணி(கனடா), யோகநாதன்(அவுஸ்திரேலியா), சிவசோதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கிமைனி, அனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ரஞ்சிதாதேவி(இலங்கை), ராஜினிதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ரவீந்திரன்(இலங்கை), சாந்தினி(பிரான்ஸ்) மற்றும் சோதினி(இங்கிலாந்து), கேதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.