யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும், யாழ். ஊர்காவற்துறையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சுகுணநாதன் அவர்கள் 09-08-2023 புதன்கிழமை அன்று ஊர்காவற்றுறையில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வல்லிபுரம்(ஆயுள்வேத வைத்தியர்) நாகாம்பிகையம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாராயணசாமி சிதம்பரநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரிக்காசாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
வான்மதி அவர்களின் பாசமிகு தந்தையும்,
அம்பலவாணநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் புனித அந்தோனியார் கல்லூரி- ஊர்காவற்றுறை), காலஞ்சென்ற கருணைநாதன், குணாம்பிகை, ஞானாம்பிகை மற்றும் புனிதாம்பிகை, அமிர்தாம்பிகை, நிமலநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் சண்முகநாதன் மகா வித்தியாலயம்- கரம்பொன்), விமலாம்பிகை, கவிதாம்பிகை, கலாநாதன், சோமநாதன், விவேகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மணிவாசகம், ராஜலட்சுமி, சரஸ்வதி மற்றும் செல்வரட்ணம்(இலங்கை பலநோக்கு கூட்டுறவு சங்க ஓய்வுபெற்ற லிகிதர்- யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர், துடுப்பாட்ட வல்லுநர், இலங்கை மற்றும் கனடிய துடுப்பாட்ட நடுவர்), கணேசன், அருளானந்தா, நந்தினி, கிருஷ்ணன், தயாளினி, சுஜாதா, தயானந்தா, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.