இலங்கையை ஆண்ட காலனித்துவ ஆட்சியளார்களில் மக்களின் கலை கலாச்சார மத சின்னங்களை திட்டமிட்டு அழிப்பதில் போர்த்துக்கீசர் மிக முனைப்போடு இருந்தனர்.
சிறு வயதில் 60 களின் பின் பகுதியில் கூட எனது பப்பம்மா விரத துவச நாட்களில் அடுப்பு கூரைக்குள் சாப்பிட்டு முடிந்த பின் வாழை இலையை ஓழிக்கும் நடைமுறையை கொண்டிருந்ததை கண்டிருக்கிறேன்.
இப்படி போர்த்துகீசருக்கு பயந்து செய்த பய காரியம் பல நூற்றாண்டுகளாக தலை முறைகளாக கடந்து வந்து இருக்கிறது.
இப்படி பல நடைமுறைகளை போர்த்துகேயருக்கு தெரியாமல் செய்து வந்திருக்கிறார்கள், போர்த்துக்கேயர் ஆலய கோபுரத்தில் ஏறி இருந்து இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை இந்த புகைப்படம் சித்திரம் காட்டுகிறது.
இந்த சித்திரம் நயினாதீவு கோயிலில் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள் என முகநூலில் இந்த தகவலை பதிவிட்டுள்ளனர்.