இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன்(08) ஒப்பிடுகையில் இன்று(09) தங்கத்தின் விலை 650 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 620,556 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 161,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 650 ரூபா குறைவடைந்து 160,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.