தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கான நியமனம் குறித்த அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அரசியலமைப்பு சபை கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள இரண்டு உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் வெற்றிட உறுப்பினர்களை நியமிப்பதற்கு நேற்று (02) அரசியலமைப்பு சபை கூடி உள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பான நியமனங்களுக்கான பரிந்துரைகள் நேற்று முன்வைக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.