கடுவலை வெலிபாறையில் உள்ள முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் இனந்தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலத்தை கடுவலை பொலிஸார் இன்று பிற்பகல் மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் சடலமாக மீட்கப்பட்டவர் கொத்தடுவ சாமர என அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான சம்பவத்தின் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்படுகிறது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.