இலங்கையில் உள்ள பகுதியொன்றில் மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கிரியெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (01-08-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவத்தில் சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த 37 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வறுமையிலும் மனைவி வெளிநாடு செல்வதை அவரால் தாங்க முடியாத காரணத்தில் குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.