களுத்துறையில் சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் வடிகானிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சத்துவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சென்ற வேலையே இன்று செவ்வாய்க்கிழமை (1) காலை சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் 70 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நேற்று திங்கட்கிழமை (31) அல்லது அதற்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (30) வெளிநோயாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.