சந்தையில் கரட் மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலை தொடர்ந்தம் அதிகரித்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பொருளாதார மத்திய நிலையங்களுக்குப் பொறுப்பானவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடை மெனிங் சந்தையில் நேற்றைய தினம் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 300 முதல் 350 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் விற்பனையாகிய நிலையில் மீகொடை சந்தையில் 400 ரூபாவை விடவும் அதிகரித்த விலையில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேலியகொடை, தம்புள்ள, மீகொடை மற்றும் நுவரெலியா முதலான பொருளாதார மத்திய நிலையங்களில் கரட் கிலோ ஒன்றின் மொத்த விலை 400 முதல் 470 ரூபாவிற்கு இடைப்பட்ட அளவில் பதிவாகியுள்ளது.