பாணந்துறையில் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பாணந்துறை, திக்கல சந்தியில் நேற்று (24) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் பாணந்துறை தெற்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாணந்துறை தொட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து இறந்தவர் சந்தேகநபரை முச்சக்கரவண்டியின் கைப்பிடியால் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்போது சந்தேகநபர் பதிலுக்கு தாக்கியதை அடுத்து படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய பாணந்துறை, வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.