பலாங்கொடையில் இடம் பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை – உடவெல பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளர் காவு வண்டியொன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஓப்பநாயக்க காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.