தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக் குற்றச்சாட்டின் பேரில் 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கொடுவ – தும்மலகொடுவ பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்புணர்வுக்குள்ளான சிறுமி தங்கொட்டுவ அடியாவல பிரதேசத்தில் உள்ள தொழிலாளி ஒருவரின் வீட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தங்கொடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.