அம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பிரதேசத்தில் வீதியோரத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் நேற்றைய தினம் (13-07-2023) மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர், வலஸ்முல்லை பிரதேசத்திலுள்ள மரக்கறி சந்தையொன்றில் உதவியாளராகப் பணியாற்றினார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பாதாளக் குழுக்கள் செயற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.