கிளிநொச்சி பளை பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பளை – இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராணி என்ற 60 வயதான பெண்ணே கடந்த (புதன் கிழமை) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவரது பிள்ளைகள் செட்டிக்குளம் பகுதியில் வசித்து வருவதால் இவர் பளையில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது பிள்ளைகள் தாயாருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் தாயை நேரில் பார்க்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில்சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.