திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருடர்களின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பகுதியில் திருடர்கள் இரவு வேளையில் தமது கைவரியை காட்டி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் திருட வந்த இரண்டு திருடர்கள் சிசிடிவி கேமராவை கண்டதும் தலைதெறிக்க ஓடி உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைக்கு அடிமையானவர்கள் தான் இச் செயலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இப்படியாக கந்தளாய் பகுதியின் பேராறு, ரஜஎல, மத்ரஸா நகர் மற்றும் மூன்றாம் கொலனி போன்ற கிராமங்ககளில் இரண்டு மூன்று வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்கள் இரவில் தூக்கம் இன்றி தவித்து வருகிறார்கள். தனித்துக் குடியிருக்கும் வீடுகளிலும், ஆட்கள் குடியிருக்கும் வீடுகளிலும் துணிந்து திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவது சாதாரணமாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டுச் சம்பவங்கள் விடயத்தில் கந்தளாய் பொலிஸார் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.