வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளான கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளார்.
சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவுடன் குணதிலக்கவை சந்தித்த புகைப்படத்தை “சகோதரனை பார்த்ததில் மகிழ்ச்சி” என்ற வாசகத்துடன் ஹரின் பெர்னாண்டோ சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான் சனத் ஜயசூரியவும் தனுஸ்கவை சந்தித்திருந்தார். பாலியல் புகாரில் சிக்கிய தனுஸ்க அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.