ரத்கம பிரதேசத்தில் ஏழு வயது மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இது தொடர்பில் ரத்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெருவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்செயலோடு தொடர்புடைய சந்தேக நபர் ரத்கம கம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய திருமணமானவர் எனவும் மாணவியின் உறவினர் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் வெளிநாட்டில் உள்ளார் எனவும் தற்போது பாட்டியின் பாதுகாப்பிலே வளர்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளான மாணவி வீட்டில் இருந்த போது அவரது பாட்டி பூ பறிக்க சென்றதாகவும் அந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபர் வன்கொடுமை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.