குருணாகலில் 108 தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகலில் கும்புல்கெடே கிம்புல்வானா ஓயாவிலேயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரி-56 ரக 83 தோட்டாக்கள், எம்16 ரக 29 தோட்டாக்கள்,16 எம்பிஎம்ஜி தோட்டாக்களுமே இவற்றில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தோட்டாக்களை இந்த இடத்தில் விட்டுச் சென்றவர் குறித்து இதுவரை பொலிஸாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கும்புல்கெடே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில், குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜகத் பண்டார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.