சந்தையில் லிட்ரோ சமையல் எரிவாயுக்கு இணையாக லாப் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த முன்னணியின் தலைவர் பீ.கே.வனிகசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
12.5 கிலோகிராம் நிறைவுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலனை விடவும் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 708 ரூபா அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு 2,982 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை 12.5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயு 3,690 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த விலை முரண்பாடு நுகர்வோருக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.