ஆறு மாதம் முதல் 3 வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவது தொடர்பான முறைமைகளில் உள்ள முரண்நிலை குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான கலந்துரையாடல் சுகாதார அமைச்சுடன் நடத்திய போதும் உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமது தொழிற்சாலை பணியாளர்கள் உச்சபட்ச செயற்திறனுடன் திரிபோஷா உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் ஆறு மாதம் முதல் 3 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவது தொடர்பான முறைமைகளில் உள்ள முரண்நிலைக்கு தீர்வு வழங்கப்பட்டால் குழந்தைகளுக்கு திரிபோஷாவை வழங்க முடியும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.