பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி ரயில் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படும் பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு 45 வயதுடையவரின் சருமம், கறுப்பு – வெள்ளை முடி மற்றும் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட பெண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் அன்றி வெள்ளை நிற மேலாடை மற்றும் வெளிர் ஊதா நிற பாவாடை அணிந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது