கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் யூடோ பயிற்றுவிப்பாளர் பசுபதி ஆனந்தராஜா கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமையை முடித்து வீடு திரும்பி சென்றுக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த நிலையில் அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நான்காவது விடுதியில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
கடந்த நாட்களில் முகநூலில் அவர் எழுதிய அதிகார துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான விடயங்களின் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட குழுவினரை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.