நவகத்தேகமவில் ஆற்றில் தாமரை மலர் பறிக்கச் சென்ற ஒரு பிள்ளையின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவகத்தேகம கொங்கடவல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் தாமரை மலர் பறிக்கச் சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப் பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய தென்னகோன் முதியன்சலாகே சிறிசேன என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவரது ஒரே பிள்ளையான 25 வயதுடைய மகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவதால் உள்ளூர் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையில் தந்தை தாமரை மலர்களைப் பறிப்பதற்காக சென்றுள்ளார்.
அவர் ஆற்றுக்குச் சென்றபோதே சேற்றில் மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.