மஸ்கெலியா பிரதான வீதியில் பேருந்து மோதி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
மஸ்கெலியா பிரதான வீதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 வயது உடைய காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த ராமசாமி சுப்பிரமணியம் (சப்பானி) என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து மோதியே நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிஸார் சென்று வீதியில் கிடந்த நபரை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் மரணித்து இருந்தது தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி பணிப்புரையின் படி பதில் நீதவான் தமயந்தி அவர்கள் வந்து பார்வை இட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனையில் பேருந்தில் மோதுண்டு பலியான உள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் பேருந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது.
சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.