அவிசாவளையில் பேஸ்புக் ஊடாக இளம் பெண்களை ஏமாற்றிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத்தோடு அதிகளவான பெண்களுடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டு அவர்களை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அழைத்து செல்லப்பட்ட பெண்களை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பின் இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அச்சுறுத்தல்களுக்கு அச்சப்பட்ட பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினால் சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 26 வயதான அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பயன்படுத்திய நவீன கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த கைத்தொலைபேசியை பரிசோதித்த போது அதில் பாரியளவு எண்ணிக்கையிலான யுவதிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் நிர்வாண காணொளிகள் காணப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.