காலி மாவட்டம் – ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட சந்தேக நபர் மீது பொலிஸார் இன்றைய தினம் (23-06-2023) துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 26 வயதுடைய நபர் மருத்துவ சிகிச்சைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு நபர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று முன்னெடுத்துள்ளது.
பொலிஸார் அவரை கைது செய்ய முற்பட்ட போது குறித்த இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதற்கு எதிரான நடவடிக்கையின் போதே சந்தேக நபரின் காலில் பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.