திருகோணமலை மாவடிச்சேனை பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் 34 வயதுடைய சந்தேக நபரொருவர் இன்றைய தினம் (22-06-2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 115 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கதிரவெளி விசேட அதிரடிப்படையினரும், ஈச்சிலம்பற்று இரானுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போதே சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவரை நாளை (23-06-2023) வெள்ளிக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.