களுத்துறை மாவட்டத்தின் ஹந்தபாங்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கியில் உதவித்தொகை பெறுவதற்காக சென்ற வயோதிப பெண் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
68 வயதுடைய வயோதிப பெண் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்காக பாதுக்கா பிரதேசத்தில் இருந்து ஹந்தபாங்கொட நோக்கி பயணிக்கும் பேருந்தில் ஏறி பிரதான வீதியைக் கடக்கும்போது இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த பெண் 1990 சுவசார்யா அம்புலன்ஸ் மூலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான 19 வயதுடைய இளைஞனும் காயமடைந்த நிலையில் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி சந்தேக நபரான இளைஞரிடம், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என தெரியவந்துள்ளது. தந்தைக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றமை பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.