வவுனியாவில் தீப்பற்றி எரிந்த வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று அதிகாலையே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அயவலர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டிற்குள் சென்ற போது குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் தடவியல் பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.