மாத்தறையில் நேற்றைய தினம் (14-06-2023) கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் ஆசிரியையின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
மாத்தறை ஊருபொக்க பிரதேசத்தில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளான 29 வயதுடைய இளம் பெண் ஆசிரியை சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியை காதலனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.