இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே உண்டு என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றி பெறும். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே மக்கள் ஆணை வழங்கினர்.
அந்த ஆணையை பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற இடதுசாரி அரசியல் சக்தியைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் இருந்தது. மக்கள் ஆணையைக் காட்டிக்கொடுக்கும் வகையில் ஒருபோதும் செயற்படமாட்டோம்.” – என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.