ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருட்களுடன் கிரிக்கெட் வீரர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவ கிரிக்கெட் அணிக்கு விளையாடும் வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடகம பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.