தற்போது இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை (SOEs) தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தீவிர ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார்மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவித்த நாமல், ஏற்கனவே இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் கூறியுள்ளார்.
இலாபகரமான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம் எனவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்