குடும்பத்தகராறு தொடர்பான முறைப்பாட்டை பக்கமுனை பொலிஸ் நிலையத்தில் விசாரணை செய்து கொண்டிருந்தபோது முறைப்பாட்டாளர் கோபமடைந்து ஆயுதத்தால் தாக்கியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சம்பவத்தில் பிரதிவாதி மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படும் பிரதிவாதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பக்கமுன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பதில் நிலைய அதிகாரி குறித்த முறைப்பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தபோதே முறைப்பாட்டாளரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.