11வருடங்கள் கல்வி கற்ற பாடசாலையை விழுந்து வணங்கி மாணவர்கள் விடைப்பெற்ற சம்பவம் பலரையும் ஆனந்த கண்ணீர் விடவைத்துள்ளது.
தெஹிகொல்ல மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு தாம் கற்ற பாடசாலையினை விழுந்து வணங்கி விடைபெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் தமக்கு 11 வருடங்கள் கல்வியை நல்கிய பாடசலையினை விட்டுப்பிரிய மனமில்லாத மாணவர்கள் , தம் பாடசாலைக்கு நன்றியினை தெரிவிக்கும் விதமாக விழுந்து வணங்கியுள்ளனர்.
இது குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், மாணவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்துவரும் சமூக ஆர்வலர்கள், பிள்ளைகளை இவ்வாறு சிறப்பான் பழக்கவழகங்களை கற்றுக்கொடுத்த ஆசியர்களுக்கும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
வளரும் பயிரை முளையில் தெரியும் என்ற பழமொழிபோல இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கி சிறந்ததொரு நிலையினை அடைவார்கள் எனவும் நெகிழ்ச்சியுடன் கூறிவருகின்றனர்.
அதேவேளை சிங்கள பாடசாலை ஒன்றில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் மாணவர்கள், வகுப்பறையில் இருந்த கதிரைகளை தூக்கி அடித்து உடைந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. அது குறித்த புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தமக்கு பின்னர் வரும் தங்களுடைய சகோதர்கள் கல்வி கற்க அந்த உபகரணங்களே பயன்படும் என்பதை உணராது பாடசாலை சொத்தை வீணாக்கியுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒரே நாட்டில் வாழும் மாணவர்களின் இருவேறான செயல்கள், ஒரு சாராரிடம் பணிவும், மரியாதையும் காணப்படுகின்றது. இன்னொரு சாராரிடம், அட்டூழியமும் அடாங்காத்தனமும் வளர்துள்ளது வேதனைக்குரிய விடயம் ஆகும்.