கண்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 மாணவர்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்றைய தினம் (08-06-2023) கைது செய்துள்ளனர்.
இதன்படி, குறித்த குழுவினர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 6ஆம் திகதி கல்வி பொதுத் தாரதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தாக்கியதில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.