இலங்கையில் பொசோன் தினத்தை முன்னிட்டு குருநாகல் – குளியாபிடிய உள்ள நகரப் பகுதியில் “பேய் வீடு“ ஒன்றை அங்குள்ள ஒருவர் நிர்மாணித்திருக்கிறார்.
குறித்த பேய் வீட்டில் சவப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டு அதில் சடலம் போல ஒருவரை படுக்க வைத்திருக்கிறார்கள்.
அந்த சடலம் திடிரென எழுவதும், பின்னர் படுத்துக்கொள்வதுமாக இருந்துள்ளது.
இந்த பேய் வீட்டை பார்க்க மக்கள் அதிகளவில் வந்துள்ளனர். இப்படி அங்கு வந்த இளைஞர்கள் குழுவொன்று, சடலம்போல பேய் வீட்டில் படுத்திருந்தவரிடம் சேட்டை செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சடலமாக படுத்திருந்தவர் இளைஞர்களை தாக்க, இளைஞர்களும் திருப்பித் தாக்கியதால் அங்குப் பதற்ற நிலை ஏற்பட்டது.
பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளதைத் தொடர்ந்து சடலமாக நடித்த நபரையும், சேட்டை செய்த இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“பேய் வீட்டைப் பார்வையிட நேற்று முன்தினம் வந்தவர்களும், எனது மூக்கை இருக்கமாகப் பிடித்து மூச்செடுக்க விடாமல் செய்தார்கள்.
அதுபோல நான் உண்மைக்கும் இறந்துவிட்டேனா என்பதை பார்க்க எனது கண்ணத்தில் அறைந்தார்கள். நானும் பொறுமையை இழந்து அவர்களை தாக்கினேன்” என சடலமாக நடித்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மேலும், சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவனே இவ்வாறு சடலமாக நடித்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், இருதரப்பினரையும் பொலிஸார், பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.