இன்றைய தினம் இடம்பெற்ற இந்திய பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது,
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
அகமதாபாத், 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று முடிந்துள்ளது,
குறித்த போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு போட்டி 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை முடிவு செய்தது.
பின்னர் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். பந்துவீச்சியில் சென்னை அணி சார்பில் இலங்கையை சேர்ந்த இளம் வீரர் 4 ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
போட்டியில் 3 பந்துகள் வீசப்பட்டநிலையில் தீடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் மழை நின்றவுடன் 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஐ.பி.எல் நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 15 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவுசெய்தது.
பந்துவீச்சியில் குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொகித் சர்மா 3 விக்கெட்டுகளும், நூர் அகமது 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.