சுற்றுலா செல்வதற்கு தயாரான இரு இளைஞர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ரயில் பாதையில் பயணித்த வதுருவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி நேற்று காலை உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
வெயாங்கொட வதுருவ பிரதேசத்தில் வசிக்கும் கவிஷ்க லக்மால் என்ற 18 வயது இளைஞனும், எஸ்.ஏ.திவங்க என்ற 19 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த இரு இளைஞர்களின் வீடுகளும் ரயில் பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலையில், காலை சுற்றுலா செல்ல திட்டமிட்டு வதுரவ ரயில் நிலையத்தை நோக்கி ரயில் பாதை வழியாக நடந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இருவரும் தொலைபேசி அழைப்பில் ஈடுபட்டு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.