இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) சீமெந்து மூடை ஒன்றுக்கு ரூ.150 குறைக்கப்பட்டமை குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்த குறைப்பு போதாது எனவும், அரசாங்கம் சீமெந்து விலையை ரூ.1800 வரை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
டொலரின் பெறுமதி ஓரளவுக்கு குறைந்துள்ள இவ்வேளையில், மக்கள் நலனுக்காக, குறிப்பாக நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான தொழிலாளர்களுக்காக அரசாங்கம் சீமெந்துப் பொதியைக் குறைக்க வேண்டும் என NCASL இன் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்சமயம் 55 சதவீத அரசு மற்றும் தனியார் துறை கட்டுமானங்கள் சந்தையில் தாங்க முடியாத சீமெந்து விலையால் முற்றிலுமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் எனவே இந்த தொகையை விட குறைந்த பட்சம் ரூ.1800 அல்லது அதற்கும் குறைவான விலைக்கு சீமெந்தை அரசாங்கம் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.
அதன்படி நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, சீமெந்து மட்டுமின்றி டொலர் மதிப்பும் ஓரளவு குறைந்துள்ளதால், உள்ளூர் சந்தையில் மணல், கிரானைட், இரும்பு போன்ற அனைத்து பொருட்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களினால் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத சில தீர்மானங்கள் காரணமாக அதிக இலாபம் பெறுவதே அவர்களின் ஒரே நோக்கமாக இருப்பதால் தற்போதைய சீமெந்து விலை குறைக்கப்பட மாட்டாது என லியனாராச்சி மேலும் தெரிவித்தார்.
சீமெந்து போன்ற முக்கியமான பொருட்களின் விலையை வர்த்தக அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் தீர்மானிக்க வேண்டும் என்றும், இறக்குமதியாளர்கள் அல்லது உற்பத்தியாளர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீமெந்தின் தாங்க முடியாத விலையினால் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 40 மில்லியன் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் நிர்மாணத் தொழிலில் 3,75,000 பேர் நேரடியாகவும், 6,50,000 பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.