இந்த ஆண்டு (2023) கல்விப் பொதுத் தராதார சாதாரண தர பரீட்சைகளை நடத்தாமல், அனைத்து மாணவர்களையும் சித்தியடைய வைத்து உயர்தரத்துக்கு அனுப்புமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, Dullas Alahapperuma முன்வைத்திருந்தார்.
இதனூடாக தற்போது குழம்பிபோயுள்ள பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் கால கட்டங்களை திருத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

