கம்பளையில் பணிக்கு சென்ற யுவதியொருவர் ஐந்து நாட்களாக காணாமல்போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா முனவுவரா என்ற யுவதியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
குறித்த யுவதி கெலிஓயாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிவதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய யுவதி, பேருந்து கட்டணமாக நூறு ரூபாய் கேட்டதாகவும், யார் மீதும் எந்த முரண்பாடும் இல்லை என்றும் தாயார் தெரிவித்துள்ளார்.
எனினும் வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள எல்பிட்டிய பள்ளிவாசலின் சிசிடிவி கமெராவில் யுவதி வீதியில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ள நிலையில், அங்கிருந்து சுமார் 50 மீட்டருக்குப் பிறகு உள்ள சிசிடிவி கமெராவில் நடந்து செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய மற்றும் மகாவலி ஆற்றின் கரையோரப்பகுதிகள் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தேடும் நடவடிக்கையில் கிராம மக்கள், கம்பளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.