நாடாளுமன்ற அமர்வு இன்று (09.05.2023) 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
சபாநாயகர் மகிந்தயாப்பா தலைமையில் இன்றைய அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
இன்று 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதன்பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.