கட்டணங்களை செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் நீர் விநியோகத் துன்டிப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
90 நாட்களுக்குப் பின்னர் அரச நிறுவனங்களுக்கும் தாமதக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மேலும் 2.9 மில்லியன் மக்கள் நீரை பெற்றுக்கொள்கின்ற நிலையில் அதில் பெரும்பாலானோர் நெருக்கடி காரணமாக மாதாந்திர கட்டணத்தில் 50% செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.