யாழ்.ஏழாலை பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து கொள்ளையர்கள் உள்நுழைந்துள்ளனர்.
வீட்டில் தாலி கொடி உட்பட சுமார் 15 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் இரண்டு நாய்கள் இருந்த நிலையில் அவற்றிற்கு மயக்க மருந்து விசிறப்பட்டு திருடர்கள் உள் நுழைந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு 9 மணி வரை பொலிசார் வரவில்லை எனவும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.