மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.
கேரளா திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு கைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார்.
திடீரென வெடித்த கைபேசி
அப்போது கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மோசமான மின்கலம் (Battery) காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
தற்காலத்தில் பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் கைபேசி பயன்படுத்துகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அவர்களின் உயிரை பறித்து விடுகின்றது . எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் மொபைல் கொடுப்பதை கூடுமானவரை தவிர்த்தல் ந்ன்று.