கனடாவில் இருந்து யாழை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பபட்ட பொதியில் சுமார் 12 கிலோ கிராம் குஷ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு மரப்பெட்டிகளை கொண்ட பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த மரப்பட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன் ரூபாவாகுமென தெரிவித்துள்ளனர்.