மீன் வாங்கச் சென்ற இளம் தம்பதியினர் மீது லொறி ஒன்று மோதியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை வெந்தேசிவத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இமாஷா கருணாதிலக்க என்ற பெண் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் நேற்று (23) இரவு களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அங்கு சென்று மீன் வாங்கும்போது களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி வந்த லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.