மன்னார் – நானாட்டான் கமநல சேவை நிலையத்தில் பசளை பெறுவதற்காக இன்றையதினம் கொழுத்தும் வெய்யிலில் மக்கள் காத்திருந்தமை குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
கடும் வெப்பமான காலநிலை
பசளை பெறுவதற்கு மக்கள் கொளுத்தும் வெயிலில் நீணட நேரம் காத்திருந்துள்ளனர். அதேவேளை நாட்டில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வரும் நிலையில் மக்கள் அநாவசியாமாக வெளியில் சுற்ற வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெய்யிலில் நிற்பதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொறுபற்ற சிலர் இவ்வாறு மக்களை காக்கவைத்தமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு ப்சளை பெறும் அமைப்புகளுக்கு குறித்த தினங்களை வழங்கி சிரமங்களை தவிர்த்திருக்கலாம் என்றும், அது அலுவலர்களுக்கும் மக்களுக்கும் சிரமங்களை குறைந்திருக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.